surya-aircel-iphone-4s-launch-photos
--
Posted By ACTORSURYA`SAUDIQ-7TN09BE5005 to ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005 on 11/29/2011 07:03:00 PM
--
Posted By ACTORSURYA`SAUDIQ-7TN09BE5005 to ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005 on 11/29/2011 07:03:00 PM
சகுனி படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது. |
ஷங்கர் தயாள் இயக்கும் சகுனி படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாயகன் கார்த்தி நடிக்கிறார். இந்த ஓக்ஸன்-கொமெடி படத்தின் மூலமாக அனுஷ்கா-கார்த்தி இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் பட வேலையை வேகமாக தொடங்கியுள்ளது படக்குழு. சாலக்குடியில் பெரிய மரப்பங்களா செட் போட்டுள்ளார் கலை இயக்குநர் பிரபாகரன். முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி-அனுஷ்கா ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இந்தப்படத்துக்கு கமெராமேனாக பணியாற்றுகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது இயக்குனர் சுராஜ் படமாக ஓக்சனும் கொமெடியும் கலந்து இருக்கும். நாயகன் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நாயகி அனுஷ்கா நடிக்கிறார் என்கிறது பட வட்டாரம். கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா, முதல்முறையாக. இன்னும் பெயர் சூட்டப்படாத
இந்தப் படத்தை இயக்குகிறார் தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11அன்று தொடங்கியது. பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கார்த்தியும் சந்தானமும் இணைந்த சிறுத்தை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து சகுனியிலும்
கார்த்தியுடன் இணைந்துள்ளார் சந்தானம்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக மரத்தால் ஆன பிரமாண்டமான பங்களா செட் அமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர். சாலக்குடியில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. by A_S |
பாராட்டுக்கள், விமர்சனங்கள் என இரண்டு பக்கங்களையும் சந்தித்துவிட்டது '7ஆம் அறிவு'. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சூர்யா. எவ்வளவு கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க என்று தயாரான சூர்யா, அதற்கு முன்பாக பத்து நிமிடம் இடைவெளி இல்லாமல் பேசியதிலிருந்து…..
"மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு இரண்டையுமே மதிக்கிறேன். 7ஆம் அறிவுக்கு கொடுத்துள்ள விமர்சனங்களை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். நான் நடிக்க வந்து 13 வருஷமாச்சு. முதல் படம் பண்ணும்போது, "எனக்குன்னு ஒரு மார்க்கெட், பிஸினெஸ் இருக்கும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டிப்பிடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. சினிமா துறையில் பெரிய லெஜண்டாக இருக்கும் ஒருவர் படம் பார்த்துவிட்டு "இந்த படம் பற்றி ஏன் இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் நானும் மற்றவர்கள் சொன்னதை கேட்டு படம் எப்படி இருக்குமோ என்றுதான் நினைத்தேன். என் பையன்தான் படத்திற்கு அழைச்சிட்டு போனான். ரொம்ப பிரமாதம்" என்று பாராட்டினார்" என்ற சூர்யா, கேள்விகளுக்கு தயாரானார்.
நீங்க தியேட்டருக்கு போய் படம் பார்த்தீங்களா?
"இன்னும் இல்லீங்க. இத்தனை வருடம் ஆன பிறகும் தியேட்டரில் முதல் நாளில் ஆடியன்சுடன் சேர்ந்து படம் பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஒரு படம் முடிந்த பிறகு எனக்குள்ளே இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமோ என்ற தாழ்வு மனப்பான்மைதான் வரும்."
உங்க படத்தை விஜய் பார்த்தாரா? விஜய் படத்தை நீங்க பார்த்தீங்களா?
"அவரு பார்த்தாரான்னு தெரியல. ஆனா விஜய் மிஸ்ஸஸ் பார்த்துட்டாங்க. ஜோதான் அவங்களுக்கு டிக்கெட் எடுத்துகொடுத்து எல்லோரும் ஒண்ணா சேர்ந்து படம் பார்த்திருக்காங்க. படம் பார்த்துட்டு ஒரு படத்துல இவ்வளவு உழைப்பான்னு சொல்லியிருக்காங்க. வேலாயுதம் படத்தை நான் இன்னும் பார்க்கல. ஆனா இரண்டு படமும் நல்லா போவதை நினைத்தால் சந்தோஷமா இருக்கு"
ரஜினி படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?
"தியேட்டரிலிருந்து வெளியே வந்ததும், தோளில் கை போட்டு பாராட்டிவிட்டு வேகமா நடந்து போய் காரில் ஏறி கிளம்பினார். கமல் சார் படம் பார்க்கும்போது நான் ஊர்ல இல்ல. "பையன் நல்ல ஃபார்ம்ல இருக்கான்ல" என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். இப்போ நான் பெசண்ட் நகரில் வீடு கட்டி போயிட்டேன். வாரத்துல இரண்டு நாள் தி.நகர் வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவோட சாப்பிடுவிட்டு போவோம். அப்பா படம் பார்த்துட்டு பெசண்ட் நகர் வீட்டுக்கு நேரா வந்துட்டார். என்னை பாராட்டியபோது அவர் கண் கலங்கினார். எனது இத்தனை வருட கேரியரில் அவர் என்னை கண்கலங்கி பாராட்டியது இதுதான் முதல் முறை."
அடுத்து?
"கே.வி.ஆனந்த் சாருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்றேன். 7ஆம் அறிவைவிட ஒருபடி மேலான படமாக இருக்கும். எனக்கு தெரிந்து அதுபோன்ற ஒரு பாத்திரத்தில் இதுவரை யாரும் நடித்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்"
by
A_S
கமல் மகளுடன் நடிப்பதில் சூர்யாவிற்கு தயக்கம் |
[ Tuesday, 08 November 2011, 09:17.43 PM GMT +05:30 ] |
சூர்யாவும் கமல் மகள் ஸ்ருதியும் ஜோடியாக நடித்த 7ஆம் அறிவு படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. |
இந்த படத்தை குறித்து சூர்யா அளித்த பேட்டியில் 7ஆம் அறிவு படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகின்றது. நான் நடித்த படங்களிலேயே "சிங்கம்" தான் அதிகம் வசூல் ஈட்டியது. அந்த வசூலை "7ஆம் அறிவு" படம் பத்து நாட்களில் தாண்டி சாதனை படைத்துள்ளது. நிறைய பாராட்டுகளும் குவிகின்றன. ரஜினி படம் பார்த்து கட்டிபிடித்து வாழ்த்தினார், கமலும் பாராட்டினார். நான் புது வீடு கட்டி வருகிறேன், இதனால் தற்காலிகமாக பெசன்ட் நகரில் வசிக்கிறேன், படம் பார்த்த உடன் என் தந்தை சிவகுமார் அந்த வீட்டுக்கு வந்தார், என்னை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அது அப்பா எனக்கு கொடுத்த பெரிய பாராட்டு. கமல் மகள் ஸ்ருதிக்கு வலுவான கதாபாத்திரம், அவருக்கு என்னை விட படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என்றார். கதைப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். போதி தர்மரை சீனாவிலும், ஜப்பானிலும் தெய்வமாக வணங்குகின்றனர். தற்கால தமிழ் இளைஞர்கள் சிந்தனைகள் வேறு மாதிரியாக இருக்கின்றது. அவர்களை நமது பழைய கலாச்சாரத்துக்கு கொண்டு வர இந்த படம் பயன்பட்டு உள்ளது என்றார். ஸ்ருதி கமல் மகள் என்பதால் அவருடன் நெருங்கி நடிக்க பயம் இருந்தது. அவர் நடந்து வந்தாலே கமல்சார் வந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வந்தேன்.படம் இறுதி காட்சியில் சண்டை பயிற்ச்சியில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார். விஜய்யின் "வேலாயுதம்" படம் இன்னும் பார்க்கவில்லை. இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடுகின்றன. அடுத்து குடும்பபாங்கான படங்களில் நடிக்க உள்ளேன்.17ம் நூற்றாண்டு சரித்திர படமொன்றிலும் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்ட இருக்கிறேன். விஜய் ரசிகர் மன்றத்துக்கு கொடி இருப்பது போல் உங்கள் ரசிகர்களுக்கு கொடி கொடுப்பீர்களா என்று கேட்கின்றனர். ஆனால் கொடி வைத்து ரசிகர் மன்றத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று சூர்யா கூறினார். by A_S |
Surya is now officially the 2nd highest paid actor in South India after Rajinikanth and puts him ahead by a mile with respect to his competitors.
Surya's take home remuneration stands at Rs. 24 Crores that he received for Maatraan (including Telugu Rights). This is at least 10 Crores higher
than the nearest competitors such as Ajith and Vijay in that order. Surya's years of dedication in slowly building his Telugu market since Ghajini has
paid rich dividends now. This huge gap in remuneration will be difficult to close by both Ajith and Vijay since they haven't made
much inroads in Telugu Industry, which is the wild card when it comes to BO collections these days.
BY
A_S