ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005

ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005
ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005

Monday, 2 April 2012

நான் ஈ பாடலை வெளியிட்ட சகோதரர்கள்

First Published : 02 Apr 2012 05:15:47 PM IST

Last Updated : 02 Apr 2012 06:00:23 PM IST

நான் ஈ படப் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யாவும், அவரது தம்பி நடிகர் 
கார்த்தியும் பாடலை வெளியிட இயக்குநர்கள் லிங்குசாமியும், பாலாவும் பெற்றுக் கொண்டனர்.

சத்யம் சினிமாஸில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், படத்தின் இயக்குநர் ராஜாமௌலி பேசுகையில், நான் சென்னையில் பிறந்து தமிழ் 
படங்களைப் பார்த்து வளர்ந்தவன். படங்கள்தான் என் கடவுள், சத்யம் சினிமாஸ்தான் என் கோயில், இங்கு தான் ஒவ்வொரு படத்தையும் பார்த்து 
படம் எடுப்பது என்ன என்பதை நான் கற்றுக் கொண்டேன் என்றார்.

இப்படம் பற்றி நடிகர் சூர்யா பேசுகையில், ஒரு நடிகனின் வாழ்க்கைப் பற்றிய படம் இது.  இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் 
இப்படம் அமையும். கணினி தொழில்நுட்பங்கள் அதிகளவில பயன்படுத்ப்பட்டுள்ளது என்று கூறினார்.

மே முதல் வாரத்தில் இப்படம் தயாராகி கோடை விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திரையிடப்பட உள்ளது.
by

A_S

Tuesday, 14 February 2012

அலெக்ஸ் பாண்டியன்’ – கார்த்தி படத்தின் பெயர்

ஒரு பக்கம் 'சகுனி', இன்னொரு பக்கம் பெயரிடப்படாத படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மேக் அப் போட்டு வந்தார் கார்த்தி. 11-11-11 என்ற விசேஷ தேதியில் கார்த்தியின் பெயரிடப்படாத புதிய படத்தை தொடங்கினார்கள்.

மூன்று மாதங்களாக தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் இப்போது படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார்கள். 'அலெக்ஸ் பாண்டியன்'. இதுதான் படத்தின் தலைப்பு. 'மூன்றுமுகம்' படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ரஜினியின் கேரக்டர் பெயர் இது. ரஜினி ரசிகர்களை கவரும் இந்த தலைப்பு, தனது படத்திற்கு அமைந்ததை படக்குழுவினரிடம் சொல்லி மகிழ்கிறாராம் கார்த்தி.

'தலைநகரம்', 'படிக்காதவன்' படங்களை தொடர்ந்து சுராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். பருத்திவீரன்', 'சிங்கம்', 'சிறுத்தை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


by

senthil